தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அறிவிப்பு!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சில மாநிலங்களில் 1 நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பட்டாசு மற்றும் புதியத்துணி விற்பனை களைகட்டி கொண்டிருக்கிறது. மேலும், ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவதால் தமிழகம் முழுவதுமே கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. மேலும், தமிழக பள்ளிகளுக்கு திங்கட்கிழமையும் கூடுதலாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குதூகலத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் குறைப்பு – நிம்மதியில் மக்கள்!
ஆனால், ஒரு சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கேரளா மாநிலத்தில் தீபாவளியொட்டி ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.