தமிழகத்தில் மின் கட்டணம் குறைப்பு – நிம்மதியில் மக்கள்!
தமிழகத்தில் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணியை மின் வாரியம் தொடங்கி இருக்கிறது.
மின் கட்டணம் குறைப்பு
தமிழக மக்களுக்கு கடந்த சில மாதங்களாக மின் கட்டண உயர்வு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள வீடுகளில் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறது. அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் குறைய இருக்கிறது.
பள்ளி மதிய உணவு திட்டத்தில் இனி பிரியாணி – அரசின் மாஸ் அறிவிப்பு!
அதன் படி தற்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ. 8.15ல் இருந்து ரூ. 5.15 ஆக மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 3 மாடிகள் உடைய வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு மின்கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.