இந்தியாவில் விதவை பெண்களுக்கு ரூ. 1,500 ஓய்வூதியம் – முழு விவரம் இதோ!

0
இந்தியாவில் விதவை பெண்களுக்கு ரூ. 1,500 ஓய்வூதியம் - முழு விவரம் இதோ!
இந்தியாவில் விதவை பெண்களுக்கு ரூ. 1,500 ஓய்வூதியம் - முழு விவரம் இதோ!
இந்தியாவில் விதவை பெண்களுக்கு ரூ. 1,500 ஓய்வூதியம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் விதவை பெண்களுக்கு வித்வா யோஜனா திட்டம் மூலம் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உதவித்தொகை திட்டம்

நாடு முழுவதும் அரசு உதவி தேவைப்படும் பெண்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் விதவை பெண்களுக்கு வித்வா யோஜனா திட்டம் மூலம் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அரசாங்கத்தால் நிதியுதவி வழங்கப்படும் வெளிப்படைத்தன்மை உடைய திட்டம் ஆகும். அதாவது அரசு இந்த திட்டம் மூலம் பயனர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்துகிறது.

12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவை பெண்கள் பயன் பெறலாம். மேலும் விதவை பெண்களுக்கு குழந்தை இருந்தால், அதற்கு 25 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவருக்கு 65 வயது வரை ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் மூலம் மாதம் ரூ. 1,500 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமாக இல்லாமல் 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 4500 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

மேலும் இந்த திட்டத்தில் சேர விதவைப் பெண்கள் சமூக நலத்துறைக்கு சென்று விதவை ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். கணவனை இழந்த பெண்கள் தங்களுடைய ஓய்வூதிய காலத்தில் பொருளாதார ரீதியில் தங்களை முன்னேற்றிக் கொள்ள இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவைகள், 59 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விதவை மறுமணம் செய்தால் அவர்களுக்கு இந்த திட்டம் செல்லாது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!