Whatsapp பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ்ஆப்
மக்கள் அதிகம் பயன்படுத்தும் செய்தி பரிமாற்றம் செய்யும் செயலியான வாட்ஸ்ஆப் குறித்து இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வாட்ஸ்ஆப் பயனர்களின் குறிப்பாக ப்ரீபெய்டு மொபைல் எண்களை வைத்திருப்பவர்களுக்கு, தங்கள் தொலைபேசி எண்களை மாற்றத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மொபைல் எண்ணை மாற்றும் முன் பயனர்கள் தங்களின் வாட்ஸ்ஆப் தரவை நீக்க வேண்டும்.
தீபாவளி தினத்தில் புதிய மாற்றம் – அரசின் உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்!!!
அதன் பின் நீங்கள் சிம்மை பயன்படுத்தாமல் இருந்த பின் அது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். மேலும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற மொபைல் சேவை வழங்குநர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழந்த எண்களை புதிய சந்தாதாரர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு வாட்ஸ்அப் பயனர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் செய்தி அனுப்பும் தளம் பயனரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஒரே மொபைல் எண் காரணமாக ஏற்படும் தனியுரிமை மீறல்களைத் தடுக்க இந்த உத்தரவை வெளியிட்டு இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.