மீனாவிடம் மாட்டிக் கொள்ளும் ரோகிணி.. உண்மையை சொல்வாரா ? “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், மீனா மீது முத்து கோவத்தில் இருக்க, மற்றொரு பக்கம் ரோகிணி மாட்டிக் கொள்ள இருக்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், ரவி கல்யாணத்தால் முத்து மீனா வாழ்க்கையில் பிரச்சனை வந்துள்ளது. ஆனால் அண்ணாமலைக்காக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் மீனாவிற்கு புடவை வாங்க முத்து கடைக்கு கூட்டிக் கொண்டு செல்கிறார். அங்கே கடைக்காரர் மீனாவிடம் நெருக்கமாக பேச அது முத்துவிற்கு பிடிக்காமல் இருக்கிறது.
Whatsapp பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
அப்போது முத்துவின் பாசத்தை பார்த்து மீனாவிற்கு சந்தோசம் ஏற்படுகிறது. ஆனால் முத்துவின் கோவம் அவரை பேசவிடாமல் தடுக்கிறது. இந்நிலையில் ரோகிணி பற்றிய உண்மையை சொல்ல வில்லன் மீண்டும் கிளம்பி வருகிறார். அதை பார்த்த மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.