
மக்களே ரெடியா இருந்துக்கோங்க.. !நாளை (14.12.2024) இந்த ஏரியாவில் பவர் கட்.. இதோ லிஸ்ட் உங்களுக்காக ..!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது . அந்த வகையில் நாளை (14-12-2024) தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
தூத்துக்குடி:
விளாத்திகுளம், வேப்பலோடை, சூரங்குடி.
புதுக்கோட்டை:
குளத்தூர், கல்மேடு, மேல்மாந்தை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

























