நாளைய வானிலை அறிக்கை.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 20) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் வரும் இன்று (அக்டோபர் 19) முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.



























Super
Nice