T20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?? தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!!

0
T20 ??? ???????? ???????????? ?????? ???? ??????????? - ???????????? ?????? ???????????!!
T20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?? தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!!
T20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?? தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!!

T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 வது சீசன் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதையடுத்து நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக நாளை (அக்டோபர் 20) நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

IND vs NZ 1st Test 2024: இந்தியா சொதப்பல் பேட்டிங்.. வெற்றியை நோக்கி நியூசிலாந்து!!

அதாவது இவ்விரு நாடுகளின் ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் இதுவரை T20 உலக கோப்பையை வென்றதில்லை. உலக கோப்பை T20 தொடரில் நியூசிலாந்து அணி 2 முறையும், தென் ஆப்பிரிக்கா அணி ஒரு முறையும் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. ஆனால் இம்முறை இவ்விரு அணிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் கோப்பையை வெல்லும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!