IND vs NZ 1st Test 2024: இந்தியா சொதப்பல் பேட்டிங்.. வெற்றியை நோக்கி நியூசிலாந்து!!
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை குவித்து இருந்தது. இதையடுத்து இன்றைய 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர்.
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்தியாவின் வருகையை விரும்பும் பாகிஸ்தான்.. பிசிசிஐயின் முடிவு என்ன??
ஆனாலும் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஆனால் மழை குறுக்கிட்டதால் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து 5 ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (அக்டோபர் 20) காலை 9.30 மணிக்கு தொடங்கும்.


























