TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகள் 2022 – வெளியாகும் தேதி அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களுக்கான தேர்வை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தியது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக, TNPSC சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
அதன் படி, இன்னும் ஒரு சில நாட்களில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ள இந்நிலையில் TNPSC ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிடுள்ளது. அந்த அறிவிப்பின் படி, குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
தேர்வின் பெயர் | குரூப் 2 & 2A |
பணியிடங்கள் | 5529 |
Status | Result Date Released |
தேர்வு தேதி | 21.05.2022 |
TNPSC Group 2 & 2A தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி அடைந்து உள்ளனர்.
TNPSC Group 2 & 2A Result 2022 எவ்வாறு சரிபார்க்கலாம்?
- முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (Latest Result ) பகுதியைக் கண்டறியவும்.
- தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
- சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
- இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.