தமிழகத்தில் அஞ்சலகங்கள் பணி நேரம் குறைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பேரிடர் காரணமாக அஞ்சலகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்து அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது.
அஞ்சலகம் செயல்பாடு:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் தினமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் வரை நோய் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த நோய் கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள், கடைகள், மால்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி துவங்கி மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதே போல அஞ்சலகங்கள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அஞ்சலகங்களும் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அனைத்து கவுன்டர்களும் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!
அதிகாரிகள் விரும்பினால் அஞ்சல் அலுவலகங்களில் தேவையான அளவு பணியாளர்களை கொண்டு மட்டுமே இயங்கலாம். அனைத்து அலுவலக அதிகாரிகளும் பணியாளர்களின் வருகை குறித்த விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் கை சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவவசம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post office jobs looking