தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!

0
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் இன்று (நவ. 28) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று (நவ.27) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று (நவ.28) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதன் படி திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதே போல நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மேலும் நவ.30 முதல் டிச.4 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடல் பகுதிகளில் நவ. 28 முதல் டிச. 2 ஆம் தேதி வரை தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!