சீனாவை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்.. இந்தியாவிற்கு புதிய ஆபத்து – மத்திய அரசு அவசர நடவடிக்கை!

0
சீனாவை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்.. இந்தியாவிற்கு புதிய ஆபத்து - மத்திய அரசு அவசர நடவடிக்கை!
சீனாவை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்.. இந்தியாவிற்கு புதிய ஆபத்து - மத்திய அரசு அவசர நடவடிக்கை!
சீனாவை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்.. இந்தியாவிற்கு புதிய ஆபத்து – மத்திய அரசு அவசர நடவடிக்கை!

சீனாவில் குழந்தைகளை தாக்கும் மர்ம வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், அது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

மர்ம வைரஸ்

அண்டை நாடான சீனாவில் கடந்த சில வாரங்களாக குழந்தைகள் பலர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக, மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!

அதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கடிதத்திற்கு பின் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!