தமிழகத்தில் நவ.18 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருச்செந்தூர் மாவட்டத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள்.
1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!
இந்நிலையில் இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் காரணமாக அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லுரிங்கள் மற்றும் அரசு அலுவகங்கள் மூடப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.