1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!

0
1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!
1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!
1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!
தைவான் அரசு ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

வேலைவாய்ப்பு;

இந்தியா மற்றும் தைவான் இடையேயான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது தைவான் நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலிருந்து பண்ணைகள், தொழிற்சாலைகள், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 1 லட்சம் பேரை பணியமர்த்த தைவான் நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக ப்ளூ பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்தில் கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!