ரூ.603 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..உயரும் சிலிண்டர் மானியம் – அரசின் மாஸ்டர் பிளான்!

0
ரூ.603 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..உயரும் சிலிண்டர் மானியம் - அரசின் மாஸ்டர் பிளான்!
ரூ.603 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..உயரும் சிலிண்டர் மானியம் - அரசின் மாஸ்டர் பிளான்!
ரூ.603 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..உயரும் சிலிண்டர் மானியம் – அரசின் மாஸ்டர் பிளான்!

மத்திய அரசு குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் மானிய தொகையை உயர்த்த உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சிலிண்டருக்கு மக்கள் செலுத்தும் தொகை குறைய வாய்ப்புள்ளது.

சிலிண்டர் மானியம்:

மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு  சிலிண்டர் வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வரை சிலிண்டர் விலை 1100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அரசுக்கு இது தொடர்பாக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு வரவுள்ள தேர்தலை ஒட்டி அரசு சிலிண்டருக்கு வழங்கும் மானிய தொகையினை உயர்த்தி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது . முன்னதாக சிலிண்டர் மானியத்தை ரூபாய் 200 அதிகரித்து வழங்கியது.

1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்!

தற்போது சிலிண்டருக்கு வழங்கும் மானிய  தொகையை மேலும் ரூ.`100 அதிகரித்து 300 ரூபாய் மானியம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டரின் விலை ஆனது மானிய தொகையை தவிர்த்து 603 க்கு விற்பனை செய்யப்படும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் விரிவாக்க பணிகளில் மேலும் 75 லட்சம் பெண்களுக்கு ஏரிவாயு இணைப்புகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையானது பத்து கோடியை தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!