தமிழக பள்ளி தலையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – 11 மணிக்கு குறுஞ்செய்தி கட்டாயம்!
தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த தகவல்களை குறுஞ்செய்தியை உரிய நேரத்திற்குள் தினசரி அனுப்ப வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆய்வறிக்கை:
தமிழகத்தில் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை மற்றும் அதிக உணவு வழங்கப்பட்டு வருகிறது இதன் வாயிலாக எண்ணற்ற மாணவர்கள் பசியின்றி கல்வி பயின்று வருகின்றனர். இந்த சத்துணவு திட்டத்தில் சத்துணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த ஆய்வறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி வாயிலாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் பெறுவதில் பெரிய சிக்கல் – உடனே இதை பண்ணுங்க!!
இருப்பினும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் முறையாக இப்பணியை மேற்கொள்ளவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து சமூக நலத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி வாயிலாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட நலத்துறைக்கு சத்துணவு அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.