தீபாவளிக்கு பின்னர் சென்னைக்கு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் – போக்குவரத்து துறை தகவல்!
தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னைக்கு மக்கள் திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்:
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நவம்பர் 10ஆம் தேதி ஆன வெள்ளிக்கிழமை (இன்று ) முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதற்காக தமிழக அரசு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து நடந்து வந்தது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணியிடங்கள் மற்றும் இருப்பிடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நவம்பர் 13ஆம் தேதி ஆன திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அறிவிப்பு!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளதால், இவர்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 60 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. வழித்தட பெயர் பலகைகளை சரிவரப் பொருத்தியும், 100% இருக்கை வசதியுடனும், சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இந்த சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.