தமிழகத்தில் நவ.24 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் நவ.24 ஆம் தேதி நடைபெறும் சந்தனக்கூடு நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி விழாவில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவதுண்டு.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அந்த வகையில், இந்த ஆண்டு ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி நவ. 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.