தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த வாரம் முடிந்த நிலையில், வருகிற நவ.25 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகரஜோதி ஏற்றப்படும். அதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அடடா..! 8 % வட்டி விகிதத்தில் சேமிப்பு திட்டமா? – முழு விவரம் இதோ!
இது குறித்து வெளியான அறிக்கையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை பகுதியில் நவ. 25 முதல் நவ. 27 வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மகரஜோதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.