அடடா..! 8 % வட்டி விகிதத்தில் சேமிப்பு திட்டமா? – முழு விவரம் இதோ!
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் எட்டு சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தை குறித்து இப்பதிவின் மூலமாக அனைத்து விவரங்களுக்கும் தெரிந்து கொள்ளலாம்.
சேமிப்பு திட்டம்:
10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தின் மூலமாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சமும் செலுத்த வேண்டும். இக்கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வருமானவரி சட்டம் 1961 பிரிவு 80 C ன் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரை வரி தள்ளுபடி பெற முடியும்.
தமிழகத்தில் இன்று (நவ. 21) 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!
குறிப்பாக ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்திற்கு இரண்டு எஸ் எஸ் ஒய் கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு அரசு எட்டு சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது. பெண் குழந்தை 18 வயதுக்கு மேல் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் உயர்கல்விக்காக முந்தைய ஆண்டின் நிதியிலிருந்து 50 சதவீதம் வரை கடன் உதவி பெற்றுக் கொள்ள முடியும்.