FD திட்டத்தில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் – ஹாப்பி நியூஸ்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஹேப்பி நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
வட்டி விகிதம்:
நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தற்போது வாடிக்கையாளர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனது FD திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி ஐஓபி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானது நவம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.24 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
7 முதல் 29 நாட்கள் திட்டத்திற்கு நான்கு சதவீத வட்டியும், 30 முதல் 90 நாட்கள் திட்டத்திற்கு 4.25% வட்டியும், 91 முதல் 179 நாட்கள் திட்டத்திற்கு 4.5% வட்டியும், 180 முதல் 269 நாட்கள் வரையிலான திட்டங்களுக்கு 4.95% வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடைய மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 80 அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடி மக்களுக்கு 0.75 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.