SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – 94 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்க!
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளிடம் இருந்து Resolvers பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Resolvers பதவிக்கு என 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- ஓய்வுபெற்ற எஸ்பிஐ அதிகாரிகள் என்பதால், குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை. போதுமான பணி அனுபவம், அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆழமான அறிவு மற்றும் தொடர்புடைய பகுதியில் ஒட்டுமொத்த தொழில்முறை திறன் கொண்ட முன்னாள் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா? இதோ பாருங்க முதல்ல!!
- விண்ணப்பதாரரின் வயது 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.