SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – 94 பணியிடங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளிடம் இருந்து தீர்வுகாணும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் நவம்பர் 1, 2023 முதல் நவம்பர் 21, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | Resolvers |
பணியிடங்கள் | 94 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI காலிப்பணியிடங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Resolvers பதவிக்கு என 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் ஓய்வுபெற்ற எஸ்பிஐ அதிகாரிகள் என்பதால், குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை. போதுமான பணி அனுபவம், அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆழமான அறிவு மற்றும் தொடர்புடைய பகுதியில் ஒட்டுமொத்த தொழில்முறை திறன் கொண்ட முன்னாள் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CMRL சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
Resolvers வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
SBI தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.