தீபாவளியையொட்டி இலவச ரேஷன் வழங்க திட்டம் – கூட்டுறவு சங்கம் அறிவிப்பு!!

0
தீபாவளியையொட்டி இலவச ரேஷன் வழங்க திட்டம் - கூட்டுறவு சங்கம் அறிவிப்பு!!
தீபாவளியையொட்டி இலவச ரேஷன் வழங்க திட்டம் - கூட்டுறவு சங்கம் அறிவிப்பு!!
தீபாவளியையொட்டி இலவச ரேஷன் வழங்க திட்டம் – கூட்டுறவு சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இலவச ரேஷன்:

தமிழக ரேஷன் கடைகளில் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கார்டு காரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போதைக்கு ரேஷன் கடைக்காரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், இரண்டு கிலோ சர்க்கரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ரூ. 25க்கு வழங்கஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடையே, தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்திற்கென 8500 டன் கோதுமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – 94 பணியிடங்கள்

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் விற்பனை களைக்கட்டும் என்பதனால் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக துவரம் பருப்பு மற்றும் கோதுமையை இருப்பில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தனியார் நிறுவன பொருட்களும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது என கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!