CMC வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Project Coordinator, Demonstrator, Jr. Anaesthesia Technician, Graduate Technician Trainee போன்ற பல்வேறு பணிகளுக்கு என வேலூர் மாவட்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) |
பணியின் பெயர் | Project Coordinator, Demonstrator, Jr. Anaesthesia Technician, Anaesthesia Technician (Staff III), Graduate Technician Trainee and others |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CMC பணியிடங்கள்:
Project Coordinator, Demonstrator, Jr. Anaesthesia Technician, Anaesthesia Technician (Staff III), Graduate Technician Trainee, Senior House Surgeon, Technician Trainee, Pharmacist (Staff III), Jr. Lecturer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் CMC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
தீபாவளியையொட்டி இலவச ரேஷன் வழங்க திட்டம் – கூட்டுறவு சங்கம் அறிவிப்பு!!
CMC பணிகளுக்கான தகுதிகள்:
பணியின் பெயர் | கல்வி | வயது |
Project Coordinator | Master Degree | அதிகபட்சம் 30 வயது |
Demonstrator | Master Degree, Ph.D | – |
Jr. Anaesthesia Technician | B.Sc, Diploma | அதிகபட்சம் 35 வயது |
Anaesthesia Technician (Staff III) | B.Sc, Diploma | அதிகபட்சம் 35 வயது |
Graduate Technician Trainee | B.Sc, Diploma, Graduate Degree | அதிகபட்சம் 30 வயது |
Research Coordinator | Bachelor’s Degree | – |
Senior Resident / Assistant Professor | MS / DNB (ENT) | – |
Senior Resident (Group III) | MD / DNB | – |
Multi Functional Technician Trainee | Graduate Degree | அதிகபட்சம் 30 வயது |
Critical Care Therapist (Staff III) | B.Sc, Diploma அதிகபட்சம் | 35 வயது |
Senior House Surgeon | MBBS | – |
Technician Trainee | 12ம் வகுப்பு | அதிகபட்சம் 30 வயது |
Pharmacist (Staff III) | D.Pharm, B.Pharm | அதிகபட்சம் 35 வயது |
Jr. Lecturer | Ph.D | அதிகபட்சம் 35 வயது |
CMC பணிகளுக்கான ஊதிய விவரம்:
- Jr. Anaesthesia Technician பணிக்கு ரூ.22,130/- என்றும்,
- Anaesthesia Technician (Staff III) பணிக்கு ரூ.12,762/- முதல் ரூ.25,512/- வரை என்றும்,
- Graduate Technician Trainee பணிக்கு ரூ.8,800/- என்றும்,
- Multi Functional Technician Trainee பணிக்கு ரூ.8,800/- என்றும்,
- Critical Care Therapist (Staff III) பணிக்கு ரூ.12,762/- முதல் ரூ.25,512/- வரை என்றும்,
- Technician Trainee பணிக்கு ரூ.7,700/- என்றும்,
- Pharmacist (Staff III) பணிக்கு ரூ.12,762/- முதல் ரூ.25,512/- வரை என்றும்,
மற்ற பணிகளுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப என்றும் மாத ஊதியம் கொடுக்கப்படும்.
CMC தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CMC விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
- Project Coordinator – 01.11.2023
- Demonstrator – 04.11.2023
- Jr. Anaesthesia Technician / Anaesthesia Technician (Staff III) / Graduate Technician Trainee – 06.11.2023
- Research Coordinator / Senior Resident / Assistant Professor / Senior Resident (Group III) – 11.11.2023
- Jr. Lecturer – 30.11.2023
- மற்ற பணிகள் – 13.11.2023