மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.30,000/-
மதுரை மாவட்ட சமூக நலத்துறை (DSW Madurai) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Centre Administrator, Senior Counsellor, IT Staff, Case Worker போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | மதுரை மாவட்ட சமூக நலத்துறை (DSW Madurai) |
பணியின் பெயர் | Centre Administrator, Senior Counsellor, IT Staff, Case Worker, Multipurpose Helper, Security Guard |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட சமூக நலத்துறை காலிப்பணியிடங்கள்:
மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் (DSW Madurai) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Centre Administrator – 01 பணியிடம்
- Senior Counsellor – 01 பணியிடம்
- IT Staff – 01 பணியிடம்
- Case Worker – 06 பணியிடங்கள்
- Multipurpose Helper – 02 பணியிடங்கள்
- Security Guard – 02 பணியிடங்கள்
DSW பணிகளுக்கான கல்வி தகுதி:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, BSW, Graduate Degree, Diploma, Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
CMC வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
DSW பணிகளுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
DSW சம்பளம்:
இந்த சமூக நலத்துறை சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு மாத சம்பளம் பெறுவார்கள்.
- Centre Administrator – ரூ.30,000/-
- Senior Counsellor – ரூ.20,000/-
- IT Staff – ரூ.18,000/-
- Case Worker – ரூ.15,000/-
- Multipurpose Helper – ரூ.6,400/-
- Security Guard – ரூ.10,000/-
DSW தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DSW விண்ணப்பிக்கும் விதம்:
இந்த சமூக நலத்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மதுரை – 20 என்ற முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.11.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.