மூத்த குடிமக்களுக்கு வந்த நல்ல செய்தி.. கால அவகாசம் நீட்டிப்பு – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI Wecare என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் பலன்களை 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31ம் தேதி வரை அனுபவிக்கலாம்.
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – காத்திருக்கும் குட் நியூஸ்!
இந்த திட்டமானது சாதாரண FD திட்டத்துடன் ஒப்பிடும்போது அதிக வட்டி கிடைக்கிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தை எஸ்பிஐ வங்கி பல முறை நீட்டித்து இருந்தாலும், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை மனதில் வைத்து கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. SBI WeCare மூத்த குடிமக்கள் FD திட்டம் 2020ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது ஆகும்.