EPFO திட்டத்தில் 17.21 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு – பட்டியல் வெளியீடு!!
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே அதிகளவில் 17.21 லட்சம் உறுப்பினர்கள் EPFOல் சேர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
EPFO:
EPF அமைப்பின் கீழ் உள்ள பணியாளர்கள் தங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12%த்தை EPF-ல் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஊழியர்கள் புதிதாக EPFO திட்டத்தின் கீழ் இணைகின்றனர். அந்த வகையில், தற்போது செப்டம்பர் மாதத்தில் பிஎஃப் திட்டத்தில் இணைந்த உறுப்பினர்களின் பட்டியலை EPFO வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – காத்திருக்கும் குட் நியூஸ்!
அதன்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 17.21 லட்சம் உறுப்பினர்கள் EPF அமைப்பில் இணைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது 21,475 உறுப்பினர்கள் கூடுதலாக EPFO-வில் இணைந்துள்ளனர். இதில், பலரும் புதிதாக வேலை கிடைத்து EPFOல் இணைந்துள்ளதாகவும், மீதமுள்ள உறுப்பினர்கள் வேலையை மாற்றி மீண்டும் EPFOல் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.