ரெப்போ வட்டி விகிதம் எவ்வளவு? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மத்திய ரிசர்வ் வங்கி (RBI) குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த அறிவித்து வருகிறது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தனது பென்ச் மார்க் வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. இதன் அடிப்படையில் இந்தியாவிலும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – மத்திய அரசு அனுமதி!
இதற்கு மத்தியில் நடைபெற்ற RBI பொதுக்குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதம் 6.5% என்ற நிலையிலேயே தொடரும் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்கள் மத்தியில் சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்த ரெப்போ விகிதம் ஏறாத காரணத்தால் வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி தொகையும் உயராது.