வங்கி கடனுக்கு RBI ன் புதிய விதிமுறைகள் – பாதிப்பு யாருக்கு!
இந்திய ரிசர்வ் வங்கியானது தனிநபர் கடன்களுக்கான புதிய விதிமுறைகளை விதித்துள்ளது தொடர்பாக மூடிஸ் நிறுவனம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
தனிநபர் கடன்கள்:
இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டின் அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்தது. அதில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்களுக்கு பாதுகாப்பற்றதாக கருதப்படும் தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற கடன்கள் தொடர்பான விதிகள் கடுமையாகப்பட்டுள்ளது. அதிக ரிஸ்க் எடையுள்ள சொத்துக்கள் மூலம் கடன்களுக்கான எழுத்துறுதி விதிகள் கடுமையாக்கப்பட்டது.
TNPSC AE தேர்வுக்கு படிக்க ஈஸியான வழி – வெற்றி உறுதி..வேலை கன்பார்ம்!
இது குறித்து மோடிஸ் நிறுவனம் ஆர்பிஐயின் இந்த விதிகள் சரியான நடவடிக்கை என்றும், கடன் வழங்குபவர்கள் இழப்புகளை சரியாக சமாளிக்க அதிக மூலதனத்தை ஒதுக்க வேண்டும் என்பது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் கடன்கள் சராசரியாக 24 சதவீதமும், கிரெடிட் கார்டு கடன்கள் 28 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் வங்கி துறையின் கடன் வளர்ச்சி சுமார் 15 சதவீதமும் உள்ளது.