4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – முதல்வர் அறிவுறுத்தல்!
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அதிக புகைமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது இடைக்கால முதல்வராக மொஹ்சின் நக்வி, பதவியில் இருந்து வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானை விடவும் பஞ்சாப் பகுதிகளில் குளிர்காலத்தில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை எரிப்பதன் காரணமாகவும், தரமற்ற டீசல் புகையின் காரணமாகவும் அதிக புகைமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகும் நிலை உள்ளது. தற்போதைய தீவிர நிலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மாநில முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி – பொதுமக்கள் அவதி!!
கூட்டத்தின் இறுதியில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவே பஞ்சாப் மாநிலத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை அளித்து மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை உத்தரவிடப்பட்டுள்ளது. புகை மூட்டத்தின் அளவை குறைப்பதற்காக இந்த நான்கு நாட்கள் இடைவெளியை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நான்கு நாட்களில் மக்கள் அவசியமற்ற சூழ்நிலைகளில் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் தின கூலிகளின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் தொழிற்சாலைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து செல்வதை குடும்பத்தினர் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப்பட்டுள்ளது.