ரேஷன் கார்டில் உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா? – தெரிந்து கொள்வது எப்படி!
ரேஷன் கார்டில் இருந்து எதிர்பாராத விதமாக உங்களது பெயர் நீக்கப்பட்டு விட்டால் அதனை எவ்வாறு உறுதி செய்து கொள்வது என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெயர் நீக்கம்:
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளின் மூலமாக தான் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாதந்தோறும் வழங்கும் உணவு தானியங்கள் மற்றும் இலவச அரிசி போன்றவை கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ரேஷன் அட்டையிலிருந்து குடும்ப நபர்களின் பெயர் நீக்கம் செய்து விட்டது தெரிய வந்தால் அதனை எவ்வாறு உறுதி செய்து கொள்வது என்று எளிய வழிமுறைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – முதல்வர் அறிவுறுத்தல்!
வழிமுறைகள்:
- nfsa.gov.in/Default.aspx என்ற இணையதளத்தை பயன்படுத்தி ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.
- இந்த போரட்டலில் ரேஷன் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்து, அதில் ‘Ration Card Details On State Portals’ என்ற தலைப்பை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி பெயர் மற்றும் பஞ்சாயத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இதன் பின்னர் உங்கள் ரேஷன் கடையின் பெயர், கடைக்காரரின் பெயர் மற்றும் ரேஷன் கார்டின் வகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது திறக்கும் புதிய பக்கத்தில் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப நபர்களின் பெயர் பட்டியல் தோன்றும்.
- இதில் இல்லாத பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.
- நீங்கள் தகுந்த அரசு அலுவலகம் அல்லது இ சேவை மையத்தை தொடர்பு கொண்டு மீண்டும் உங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.