தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி – பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் காய்கறி மற்றும் கேஸ் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் உணவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்:
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெங்காயம் மட்டுமல்லாமல் தக்காளி, உருளைக்கிழங்கின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தீபாவளியையொட்டி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம் – முழு விவரங்களுடன்!!
தமிழகத்தில் கனமழை தொடர்ந்தால் அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கேஸ் சிலிண்டரின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் ஹோட்டல்களில் உணவு விலை உயர்த்தப்பட இருக்குறது. இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட கூடும்.