
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொழில்துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி – யுஜிசி முக்கிய முடிவு!
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி ஆசிரியர்களாக தொழில்துறை நிபுணர்களை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் புதிய வரைவு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
யுஜிசி முக்கிய முடிவு:
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு , இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத், கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு அங்கமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர்கள் பதவிகளின் கீழ் தொழில் வல்லுநர்களை நியமிக்கும் விதமாக உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும் திறன் அடிப்படையிலான கல்வியில் கவனம் செலுத்தும் விதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த வரைவு வழிகாட்டுதலுக்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பயிற்சி பேராசிரியர்கள் நியமனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின்படி, பொறியியல், அறிவியல், ஊடகம், இலக்கியம், தொழில்முனைவு, சமூக அறிவியல், சிவில் சர்வீசஸ் மற்றும் ஆயுதப்படை போன்ற துறைகளில், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சேவை அல்லது அனுபவம் கொண்ட வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு இதோ!
Exams Daily Mobile App Download
- ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பயிற்சி பேராசிரியரின் அதிகபட்ச பணிக்காலம் நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், கல்வி நிறுவனங்கள் சார்பில் இருந்து புகழ்பெற்ற நிபுணர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் இரண்டு மூத்த பேராசிரியர்கள் மற்றும் ஒரு சிறந்த வெளி உறுப்பினர் கொண்ட தேர்வுக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு அதன் அடிப்படையில் நிறுவனங்கள் சட்டப்பூர்வ அமைப்புகள் மூலம் முடிவெடுக்கும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பதவிக்கு முறையான கல்வித் தகுதி அவசியமாகக் கருதப்படாது. இதுகுறித்த அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்றும், 10%ஆசிரியர் பணியிடங்களுக்கு நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்