NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தேசிய அனல் மின் கழகம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Executive பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் (02.06.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- தேசிய அனல் மின் கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Executive பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
- விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.71,000/- முதல் ரூ.90,000/- சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Online Screening Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட https://www.ntpc.co.in/ இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (02.06.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.