
தமிழக இளைஞர்கள் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்!
9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் அரசு முறை பயணத்தை முடித்துவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இதனால் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எனவும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த மே 23ஆம் தேதி அரசு முறை பயணமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டு சென்று அங்கு இரண்டு நாட்கள் செலவிட்ட பின்னர் ஜப்பான் திரும்பிய முதல்வர் ஒன்பது நாட்களுக்குப் பிறகு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். இந்த, ஒன்பது நாட்கள் அரசு முறை பயணத்தை பற்றி விமான நிலையத்தில் நிருபர்களிடம் உரையாற்றியுள்ளார். அதாவது, தமிழகம் மற்றும் ஜப்பானுக்கு இடையேயான பொருளாதார நல்லுறவு ஏற்படுத்தும் வகையாக இந்த அரசு முறை பயணம் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய இரண்டு மிகப்பெரிய திட்டத்திலும் ஜப்பானின் மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
மேலும், ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் 1891 கோடி செலவில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கும், தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், வரும் 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.