இந்திய ரயில்வே துறையில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.20,200/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!  

0
இந்திய ரயில்வே துறையில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.20,200/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!  

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு எல்லை ரயில்வேயில் (NFR) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Sports Quota பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Northeast Frontier Railway (NFR)
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

ரயில்வே துறை காலியிடங்கள்:

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் (NFR) Sports Quota பிரிவின் கீழ்வரும் பணிகளுக்கென 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NFR Sports Quota 2024 கல்வி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NFR Sports Quota 2024 வயது:

Sports Quota பிரிவின் கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024 அன்றைய தினத்தின் படி, 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புது அப்டேட் – அமைச்சர் அறிவிப்பு!

NFR Sports Quota 2024 மாத சம்பளம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

NFR தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Trial Test, Interview / Assessment ஆகிய தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFR விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / ExSM / MEBC – ரூ.250/-

மற்ற நபர்கள் – ரூ.500/-

NFR விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 02.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!