தமிழகத்தில் மருத்துவத் துறையில் 5100 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மருத்துவத் துறையில் 5100 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 5100 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.,

பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது பேசிய அவர் கடந்த 6ஆம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்திய ரயில்வே துறையில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.20,200/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!  

அவர்களில் 90 சதவீதம் பேர் பணியில் சேர்ந்து உள்ளனர். மேலும் 11 ஆம் தேதி 977 செவிலியர் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 50 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த துறையில் காலியாக உள்ள 332 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மருத்துவ தேர்வாணையம் முடித்துள்ளது. தற்போது அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5,100 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை ஒரே மாதத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!