SAI நிறுவனத்தில் ரூ.1,45,000/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!  

0
SAI நிறுவனத்தில் ரூ.1,45,000/- மாத ஊதியத்தில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!  

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் High – Performance Director பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,45,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் High – Performance Director
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SAI காலிப்பணியிடங்கள்:

SAI நிறுவனத்தில் காலியாக உள்ள High – Performance Director பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

High – Performance Director கல்வி தகுதி:

High – Performance Director பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவத் துறையில் 5100 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

High – Performance Director ஊதியம்:

இந்த SAI நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.1,45,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAI தேர்வு முறை:

High – Performance Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

High – Performance Director விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 08.03.2024 என்ற இறுதி நாளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!