மொபைல் போன் பயனர்களுக்கான புதிய திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!!
மொபைல் போன் பயனர்களுக்கென தனித்துவமாக அடையாள எண்ணை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மொபைல் போன்:
ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து பயனாளிக்கும் தனித்துவமாக அடையாள எண்ணை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த ஒரு ஐடி மூலமாகவே ஒவ்வொரு பயனாளியும் எத்தனை மொபைல்கள், சிம்கள் வைத்துள்ளனர் என்பதை கண்டறியலாம். மேலும், இந்த ஒரு ஐடி மூலமாகவே பயனரின் அனைத்து தகவல்களும் பெற்றுவிடலாம்.
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று (நவ. 8) கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!
புதிய சிம் கார்டு நீங்கள் வாங்கும் போது மத்திய அரசின் புதிய அடையாள எண் உங்களுக்கு வழங்கப்படும். இதன், மூலமாக ஸ்பேம் அழைப்புகள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். இது மட்டுமல்லாமல், மொபைல் போன் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் வழங்குவதால் கூடிய விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.