தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று (நவ. 8) கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடதமிழக கடலோர மாவட்டங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களிலும், மழை பெய்துள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலாக கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்று (நவ.8) கோயம்பத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? – அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!
அதே போல நாளை (நவ.9) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே போலநவ. 10 முதல் நவ 14 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரபிக்கடல் பகுதிகளில் நவ 8 மற்றும் நவ. 9 ஆம் தேதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.