ஆதார் & வாக்காளர் அட்டை இணைப்பு பற்றிய தகவல் – தலைமை தேர்தல் ஆணையாளர்!

0
ஆதார் & வாக்காளர் அட்டை இணைப்பு பற்றிய தகவல் - தலைமை தேர்தல் ஆணையாளர்!
ஆதார் & வாக்காளர் அட்டை இணைப்பு பற்றிய தகவல் - தலைமை தேர்தல் ஆணையாளர்!
ஆதார் & வாக்காளர் அட்டை இணைப்பு பற்றிய தகவல் – தலைமை தேர்தல் ஆணையாளர்!

வாக்காளர் அட்டையை கட்டாயமாக ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். ஆதார் கார்டு இல்லையென்றால் கீழ் குறிப்பிட்டுள்ள 11 ஆவணத்தில் ஒன்றுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும்படி தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆதார் கார்டு:

வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகளவில் உருவாக்கி கொடுத்திருக்கிறது. மேலும், இனி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் எனவும், ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்கும் பணி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்கும்பணி வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வாக்காளர் பட்டியலில் இருக்கும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணி நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும், இந்தாண்டு வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேலும், 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் முன்கூட்டியே விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், அதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் கட்டாயமாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைத்தால் கள்ள ஓட்டுகள் மற்றும் பிற சூழ்ச்சி வேலைப்பாடுகள் குறைந்துவிடும்.

EPFO பயனாளர்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை டெபாசிட் – முழு விவரம் இதோ!

மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்க ஆதார் அட்டை இல்லையென்றாலும் கூட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணத்தை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டிப்பாக இந்த ஆவணங்களுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!