பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!
தமிழகத்தில் தற்போது அதிக அளவிலான மாணவர்களுக்கு காய்ச்சல்கள் பரவி வருவதால் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
பரவும் காய்ச்சல்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருகிறது. இவை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொற்றுகளின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதைம் படாதபாடு படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சில காலம் ஸ்தம்பித்து, தற்போது தான் இயல்பு நிலையை நோக்கி மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் சில பாதிப்புகள் பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் பரவி வருகிறது. முன்னதாக சிறு குழந்தைகள் அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில், தற்போது வரையிலும் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பதிப்பட்டுள்ளனர். அதிலும் பள்ளி குழந்தைகள் தான் அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொல்லிய அமைச்சர் – கல்வி கட்டணம் செலுத்த அவசியம் இல்லை!
Exams Daily Mobile App Download
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விகளும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எழுந்து வருகிறது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது என்று முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது, பள்ளிக்கு காய்ச்சல் அறிகுறியுடன் வரும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்