முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 17

0

முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 17

அனைத்துலக மாணவர் நாள்

அனைத்துலக மாணவர் நாள் (International Students’ Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

வரலாறு:

1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

தேசிய கால்-கை வலிப்பு நாள்

இந்தியாவில் நவம்பர் 17 தேதி தேசிய கால்-கை வலிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கால்-கை வலிப்பு தொடர்ச்சியான ‘வலிப்புத்தாக்கங்கள்’ மூளைக்குரிய ஒரு நீண்டகாலக் கோளாறு ஆகும். வலிப்பு நோய்கள் திடீர், திடீரென்று மின்மின்களின் (மூளை உயிரணுக்கள்) மின் வெளியேற்றங்களின் விளைவாக ஏற்படுகின்றன. எந்தவொரு வயதிலும் இந்த நிலை பாதிக்கப்படும்.

கால்-கை வலிப்பின் அறிகுறிகள்:

  • திடீரென முணுமுணுப்பு, உணர்வு இழப்பு.
  • கைகளிலோ அல்லது கால்களிலோ தொடு உணர்ச்சி உணர்வு.
  • கைகள் அல்லது கால்கள் அல்லது முகத்தில் உள்ள தசைகளில் விறைப்பு

வலிப்புத்தாக்கங்களை சமாளிக்க உதவிக்குறிப்புகள்:

  • பதட்டப்பட கூடாது.
  • வலிப்புத்தாக்கத்தின் போது அந்த நபர் கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்.
  • கூர்மையான பொருள்களை அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருள்களை அந்த நபரிடம் இருந்து அகற்றவும்.
  • எந்த இறுக்கமான கழுத்து உடைகள் தளர்த்தவும்.
  • மருத்துவ உதவி வரும் வரை அந்த நபருடன் இருங்கள்.
  • நபர் ஓய்வெடுக்க அல்லது தூங்க அனுமதிக்க.

லாலா லாஜ்பது ராய் நினைவு நாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.

இளமைக்காலம்:

லாலா லஜபதி ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய மோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் துதி கே என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் உள்ள, ‘ஜாக்ராவோன்’ என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு நூல்நிலையமாகவும் மற்றும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

அரசியல் வாழ்க்கை:

இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர். ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பால கங்காதர திலகரும், வங்காளத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பாலும் ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர். ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!