ரயில் டிக்கெட் ரத்து செய்தால் முழு பணம் ரீஃபண்ட் – இதை பாலோவ் பண்ணுங்க!!
ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தால் இவ்வாறு ரீஃபண்ட் பெறலாம் என்பது குறித்த முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்:
ரயிலில் பயண கட்டணம் மிக குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலையால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் எவ்வளவு தொகை ரீஃபண்ட் கிடைக்கும் என்பது குறித்து தற்போது காணலாம். அதாவது, பயண நேரத்திற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் மொத்த கட்டணத்தில் 25% மற்றும் குறைந்தபட்ச நிலையான பிளாட் ரேட் கழிக்கப்பட்டு மீதத்தொகை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் – கல்வித்துறை அறிவிப்பு!
அதே நேரத்தில், ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்குள் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதப் பணம் திரும்ப வழங்கப்படும். இதற்கு உடனடியாக IRCTCன் இணையதள பக்கத்திற்கு சென்று TDR-ஐ ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறையை முடிக்காவிட்டால் உங்களுக்கு ரீஃபண்ட் வழங்கப்படாது.