தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை – வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது தொடர்மழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல, இன்றும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழை பொழியலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சிலிண்டரின் விலை உயர்வால் ஹோட்டல்களில் கெடுபிடி – பொதுமக்கள் அவதி!!
அதன்படி, தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த கனமழை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.