மாதம் ரூ.90,000/- சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – விண்ணப்பிக்க நவம்பர் 3 கடைசி நாள்!
Obstetrician/Gynecologist, Pediatrician, General Surgeon, Anaesthetist, Orthopedic Surgeon, Dentist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 03.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Obstetrician / Gynaecologist – 12 பணியிடங்கள், Paediatrician – 9 பணியிடங்கள், General Surgeon – 14 பணியிடங்கள் Anaesthetist – 8 பணியிடங்கள், Orthopaedic Surgeon – 1 பணியிடம் Dentist – 1 பணியிடம் என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS/ MD, Post Graduation Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.34,000 /- முதல் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்லிங், சென்னை-600003 என்ற முகவரிக்கு 03.11.2023 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.