சிலிண்டரின் விலை உயர்வால் ஹோட்டல்களில் கெடுபிடி – பொதுமக்கள் அவதி!!
வணிக உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல்களிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிலிண்டர் விலை:
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பண வீக்கத்தைப் பொறுத்து எரிபொருட்களின் விலை மற்றும் சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததையொட்டி வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யாமல் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது, கடந்த மாதம் வணிக சிலிண்டர் ரூ. 203 உயர்த்தப்பட்டு ரூ.1898க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ. 101.50 உயர்த்தப்பட்டிருக்கிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதனால், இந்தியாவில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 1999.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் ஹோட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருக்கும் நிலையில் தாய்மார்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.