மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!! தொடர்கிறது சிறப்பு ரயில் சேவை..!! “தெற்கு ரயில்வே அறிவிப்பு”..!!
வெளியூர்களில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்போது, பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இதன் காரணமாக வாராந்திர சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகர்கோவில்-தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி பெண்களின் திருமண செலவுகளை அரசே ஏற்கும்..! வெளியான அதிரடி அறிவிப்பு..!
அதாவது, நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 1,8,15,22,29, அக்டோபர் 6,13,20,27 மற்றும் நவம்பர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இரவு 11.15 மணிக்கு இயக்கப்படுவதாகவும், மற்றும் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 2,9,16,23,30, அக்டோபர் 7,14,21,27 மற்றும் நவம்பர் 4,11,18,25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


























